பல்வகை பெருமளவு பூச்சிகளுடன் சிலோவாக்கிய நாட்டவர்கள் கைது!

Wednesday, February 6th, 2019

இலங்கையின் வனப் பகுதிகளில் பிடிக்கப்பட்ட பெருமளவு தொகை பூச்சிகளுடன் சிலோவாக்கியா நாட்டைச் சேர்ந்த ஐந்து பேர் கலவான வன பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிங்கராஜவனத்தை அண்டியுள்ள கலவான பகுதியில் தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்து நான்கு நாள்களுக்கு முன்னர் இந்தப் பூச்சிகளைப் பிடித்துள்ளனர் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வண்ணத்துப் பூச்சிகள் உள்ளிட்ட சில பூச்சி வகைகளைப் பெருமளவில் மீட்டுள்ளோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு பூச்சி வகைகள் பெருமளவில் பிடிபட்ட முதலாவது சந்தர்ப்பம் இது என்றும் கலவான வன பாதுகாப்பு அதிகாரி ஆர்.எம்.எல்.எம்.ரத்னவீர தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த ஐவரும் இரத்தினபுரி பதில் நீதிவானிடம் முற்படுத்தப்பட்டு நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts: