பல்கலை மோதல் வழக்கு ஒத்திவைப்பு!

அண்மையில் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்ட மூன்று தமிழர் மாணவர்கள் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் 22 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மோதல் சம்வத்தில் சிங்கள மாணவர்களை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு யாழ். மாணவர் ஒன்றியத் தலைவர் சிசிந்திரன் உள்ளிட்ட மூவர் கைசெய்யப்பட்டிருந்தனர். சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று (25) யாழ். நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது மாணவர்கள் சார்பான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மன்றில் ஆஜராகாத காரணத்தினால் வழக்கினை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதிக்கு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.சதிஸ்தரன்ஒத்திவைத்துள்ளார். இன்றைய வழக்கு விசாரணையின்போது, கோப்பாய் பொலிஸாரினால் அழைப்பு விடுக்கப்பட்ட ஏனைய இரு தமிழ் மாணவர்களும் மன்றில் முன்னிலையாகவில்லை.
Related posts:
|
|