பருத்தித்துறை நகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு தோல்வி!
Monday, December 5th, 2022
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைட்பட்ட பருத்தித்துறை நகரசபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை பருத்தித்துறை நகர சபையின் தலைவர் இருதராஜா இன்று திங்கட்கிழமை சபையில் சமர்ப்பித்தார்.
15 உறுப்பினர்களை கொண்ட பருத்தித்துறை நகரசபையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் 4 பேரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் சுயேட்சை தலா ஒருவருமாக வாக்களித்தனர்.
இதன்போது ஆதரவாக ஏழு வாக்குகளும், எதிராக எட்டு வாக்குகளும் பதிவானது.
இதற்கமைய வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 6 பேரும் தமிழரசுக் கட்சி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தலா ஒருவரும் வாக்களித்திருந்தனர்.
இதன்போது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 6 ஆசனங்களையும், இலங்கை தமிழரசுக் கட்சி 5 ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 2 ஆசனங்களையும் தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் சுயேட்சை தலா ஒரு ஆசனங்களையும் கொண்டமை குறிப்பிடதக்கது.
000
Related posts:
|
|
|


