பரீட்சை கடமைகளில் ஈடுபடுபவர்களுக்கான கொடுப்பனவுகளை எதிர்வரும் வாரங்களில் அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானம்!
Thursday, April 4th, 2024பரீட்சை கடமைகளில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
மேல்மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இது தொடர்பில் குழுவொன்று நியமிக்கப்பட்டு அறிக்கை கோரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அலரிமாளிகையில் நேற்று மாலை இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் பரீட்சை கடமைகளில் ஈடுபடுபவர்களின் கொடுப்பனவுகள் வழங்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
அபிவிருத்தி தொடர்பில் அறிய அவசர தொலைபேசி இலக்கம்
பொருட்களை வெளியிலிருந்த கொள்வனவு செய்யுமாறு அறிவுறுத்தம் மருத்துவர்களுக்கு எதிராக நடவடிக்கை - சுகாதா...
வறட்சியால் 17 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
|
|