பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை இணையத் தளத்தின் ஊடாக மாத்திரம் விண்ணப்பிக்க முடியும் – A/L மற்றும் புலமை பரிசில் பரீட்சை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை இணையத் தளத்தின் ஊடாக மாத்திரம் விண்ணப்பிக்க முடியும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் கொவிட் தொற்று நோயைக் கருத்திற்கொண்டு குறித்த பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை எதிர்வரும் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது..
இது சம்பந்தமான மேலதிக விபரங்களை www.donet.lk என்ற இணையத்தளத்தில் அறிந்துகொள்ள முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தகக்கது.
000
Related posts:
வெளிநாட்டவர்களுக்கு வேலை இல்லை - சவுதி
கடும் வெப்பம் – யாழில் மற்றுமொருவர் உயிரிழப்பு!
சிரமங்களை எதிர்கொண்டுள்ள போதிலும் அரசாங்கம் அபிவிருத்தி செயற்பாடுகளில் ஒருபோதும் பின்வாங்காது - அமைச...
|
|