பரணகமவின் அறிக்கை ஜூலையில் கையளிப்பு!
Wednesday, April 6th, 2016
காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த மெக்ஸ்வெல் பரணகமவின் ஆணைக்குழு தமது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை எதிர்வரும் ஜூலை மாதத்தில் ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் ,முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, மற்றும் மன்னார் பிரதேசங்களில் சுமார் 7ஆயிரம் பேரின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாகவும் திருகோணமலை, கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் வாக்குமூலங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை பெரும்பாலும் மே அல்லது ஜூனில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் இதனையடுத்தே அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
Related posts:
பேருந்துகளில் ஆசன எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்வது தடை - பிரதி பொலிஸ்மா அதிபர் !
கொரோனா தொற்று எதிரொலி - நாடாளுமன்ற அமர்வுகள் இரு நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அறிவிப்பு!
வைத்தியசாலை கழிவுகள் கடலில் கலப்பதாக தகவல் - திருமலை கடற்கரையை பார்வையிட்டார் கிழக்கு மாகாண சுற்றுல...
|
|
|


