பயிர்செய்கையில் ஏற்பட்ட பாதிப்பிற்கான இழப்பீடு வழங்கும் நடவடிக்கை இன்றுமுதல் ஆரம்பம் – விவசாயத்துறை அமைச்சர் சானக்க வக்கும்பர அறிவிப்பு!
Monday, May 9th, 2022
பயிர்செய்கையில் ஏற்பட்ட பாதிப்பிற்கான இழப்பீடு வழங்கும் நடவடிக்கை இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் சானக்க வக்கும்பர தெரிவித்துள்ளார்.
தற்போது வரையில் 3 மாவட்டங்களில் பயிர்செய்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதன் அறிக்கைகள் அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், ஏனைய மாவட்டங்களினதும் தரவுகளை உடனடியாக பெற்றுக்கொள்வதற்கு உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயிர்செய்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு 2500 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
5 மணிரேரத்தில் யாழ்ப்பாணம் செல்ல லாம்: வருகிறது அதிவேக புகையிரதம்!
சர்வதேச தரத்தைக்கொண்ட விளையாட்டு பல்கலைக்கழகமொன்றை ஆரம்பிப்பதற்கு திட்டம் – அமைச்சர் நாமல் ராஜபக்ச!
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இவ்வாரம் இலங்கை வருகை - மீனவர் பிரச்சினைகள் ஆராயப்படுமென...
|
|
|


