பயணிகள் போக்குவரத்துக்கான சேவை இடைநிறுத்தம் – போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர!

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவர் அனில் ஜாசிங்கவின் வேண்டுகோளுக்கு அமைய, எதிர்வரும் 2 வாரக்காலப்பகுதிக்கு பொதுமக்களுக்கான பொதுபோக்கு வரத்தினை பயன்படுத்த அனுமதி வழங்க முடியாது என போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் முச்சக்கர வண்டிகளில் அதிகபட்சமாக இரண்டு பேர் மாத்திரமே பயணிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாடகை கார்களில் மூன்று பேருக்கு மாத்திரமே பயணிக்க முடியுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்டதுடன் வெசாக் தினத்தை முன்னிட்டு மூடப்பட்டிருந்த கொழும்பு மெனிங் சந்தையானது மீண்டும் இன்று திறக்கப்படுவதாக மெனிங் சந்தையின் வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் பிரதி தலைவர் நிமல் அத்தனாயக இதனைத் தெரிவித்தார். மேலும் மெனிங் சந்தைக்கு வரும் நுகர்வோர் முறையான சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறும் அவர் இதன்போது கேட்டுக்கொண்டார்.
அதேபோல, நாராஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் நாளாந்தம் காலை 6.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணிவரை திறப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் அதிகாலை 5.00 மணிமுதல் பிற்பகல் 2.00 மணிவரை திறப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் 55 ஆயிரம் விசேட காவல்துறை அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது
Related posts:
|
|