பனை வளம் தொடர்பில் இளம் சந்ததியினர் அக்கறை கொள்ளாதிருப்பது வேதனையளிக்கிறது – ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம்!

Wednesday, October 24th, 2018

வறிய மக்களது வாழ்வாதாரத்திற்கான பொருளாதாரத்தை ஈட்டும் பயிராக காணப்படும் பனை வளத்தை எமது இளம் சந்ததியினர் கவனத்தில் கொள்ளாதிருப்பது வேதனையளிக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்துள்ளார்.

செல்லப்பா பார்வதி நினைவாக பனம் விதை நடுகை தினம் இன்றையதினம் உரும்பிராய் தெற்கில் அமைந்துள்ள எஸ்.பி. விவசாயப் பண்ணையில் அனுஷ்டிக்கப்பட்டது. இநத்; நிகழ்வில் தலைமை உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில் –

நடந்து முடிந்த யுத்தம் காரணமாக எமது நாட்டில் பல இலட்சம் பனை மரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. இந்நிலையில் வட பகுதியில் தற்போது பனை வளத்தை மேம்படுத்துவதற்காக பல நலத்திட்டங்களை உருவாக்கி அத்துறை சார்ந்தவர்களின் நலன்களை மேம்படுத்தி வந்திருக்கின்றோம்.

எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்த காலத்தில் பனை வளம் சார்ந்;த திட்டங்களை அதிகளவில் நாம் முன்னெடுத்து வந்ததுடன் அதன் ஆராய்ச்சிக்காக ஒரு ஆராய்ச்சி நிலையத்தையும் கைதடியில் நிறுவி சாதித்துக் காட்டியுள்ளோம்.

இந்நிலையில் தற்போது அழிக்கப்படட பனை வளத்தை மீண்டும் அதிகளவில் விருத்தி செய்வதற்காக நாம் பல திட்டங்களை உருவாக்கியுள்ளோம் அதன் ஒரு கட்டமாகவே இந்த பனை விதை நடும் திட்டமும் அமைந்துள்ளது.

கடந்த காலத்தில் பனை அபிவிருத்திச் சபை தலைவராக தான் பதவிவகித்த காலத்தில் அனுமதிபெற்று பனைதறித்தால் அதற்கு பதிலாக பனைவிதை நாட்டப்படல் வேண்டும் என்பதை முக்கிய கொள்கையாக கொண்டிருந்தேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வலிதெற்கு உடுவில் பிரதேச செயலர் ஜெயகாந்தன், பனை அபிவிருத்தி சபை முகாமையாளர் லோகநாதன், பனை அபிவிருத்திச் சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் செல்வின், விரிவாக்க முகாமையாளர் கோபாலகிருஸ்ணன் ஆகியோருடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாகச் செயலர் சிவகுரு பாலகிருஸ்ணன் கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன், மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி.வடக்கு, வலிதெற்கு பிரதேசசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

20181024_093409

20181024_095502

20181024_100903

20181024_101019

20181024_101120

Untitled-1 copy

Related posts: