பனாமா ஆவணத்தில் 68 இலங்கையர் பெயர்கள் வெளியீடு!
Wednesday, May 11th, 2016
சர்ச்சைக்குரிய பனாமா ஆவண புலனாய்வின் ஒர் பகுதியாக வெளிநாட்டு வங்கி கணக்குகளை வைத்துள்ள 65 இலங்கை பிரஜைகள் தொடர்பான விபரங்களை புலனாய்வு ஊடகவிலாளர்களின் சர்வதேச கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.
மூன்று வெளிநாட்டு துணை நிறுவனங்கள், ஏழு இடைதரகர்கள் மற்றும் ஸ்ரீலங்காவிலுள்ள 53 முகவரிகள் தொடர்பான தகவல்கள் கசிந்துள்ள ஆவணங்களில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக அவன்கார்ட் பாதுகாப்பு சேவை நிறுனத்தை சேர்ந்த மூவரின் பெயர்கள் இந்த ஆணங்களில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவன்கார்ட் நிறுவனத் தலைவர் நிஸங்க யாப்பா சேனாதிபதி, வை.ஏச்.பீ கித்சிறி மஞ்சுள குமார யாப்பா மற்றும் செனரத் பண்டார திஸாநாயக்க ஆகியோரின் பெயர்களும் இந்த ஆவணங்களில் உள்ளமை தெரியவந்துள்ளது.
அவன்காட் நிறுவனம் தனது வெளிநாட்டு நடவடிக்கைகளை பிரித்தானியாவின் வேர்ஜின் தீவுகளில் முன்னெடுப்பதற்கு சிங்கப்பூரில் செயற்பட்ட மொஸிக் பொன்சேக்கா நிறுவனம் உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனாமா ஆவணங்களில் உள்ள இலங்கை பிரஜைகள் குறித்து விசாரணை செய்வதற்கென விசேட குழுவொன்றை அரசாங்கம் அமைத்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கடந்த வாரம் அறிவித்திருந்தார்.
Related posts:
|
|
|


