பத்திரிக்கை விநியோகஸ்தர் மீது வாள் வெட்டுக்குழு தாக்குதல் – பொலிஸார் தீவிர விசாரணை!

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிக்கை ஒன்றின், விநியோகப் பணியில் ஈடுபட்டிருந்தவரை வழிமறித்த கும்பல் ஒன்று, அவரை வாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளன.
இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கோண்டாவிலைச் சேர்ந்த பாலச்சந்திரன் மதனகரன் வயது -43 என்பவரே இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்காகி, தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கொள்ளைக் கும்பல் ஒன்றே இவ்வாறு வாளால் வெட்டிவிட்டு, அவரது மோட்டார் சைக்கிளை அபகரித்துச் சென்றுள்ளது என்று சுன்னாகம் பொலிஸார் முதற்கட்ட விசாரணைகள் மூலம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இரண்டு ஆயுதக் கிடங்குகள் முற்றாக அழிந்தன!
நுரைச்சோலை அனல்மின் நிலைய பிரச்சினையை சீர்செய்ய சில தினங்கள் எடுக்கும்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்த்து தெரிவிப்பு!
|
|