பதவி விலகுகிறார் மஹிந்த!
Thursday, November 14th, 2019
ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் பதவி விலகப்போவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் மற்றொரு தேர்தலை நடத்துவதற்கு நான் தலைமை தாங்கப்போவதில்லை என்ற முடிவை இரண்டு மாதங்களுக்கு முன்னரே எடுத்துள்ளேன்.
எனது பதவி விலகல் கடிதத்தில் கையொப்பமிட்டு, அது தற்போது மேசையில் தயாராகவுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தவே முனைப்புக் காட்டப்பட்டது. அது சாத்தியப்படாது போனால் பதவி விலகத் தீர்மானித்திருந்தேன். ஆனால், ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டதால், இதனை நடத்திவிட்டு பதவி விலகத் தீர்மானித்துள்ளேன்.
Related posts:
மே தினக் கூட்டத்திற்காக 3,500 இ.போ.ச. பஸ்கள் முன்பதிவு!
நீரில் மிதக்கும் இலங்கை நாடாளுமன்றம்!
பாடசாலைப் பாடத்திட்டத்தில் சட்டக் கல்வி உள்வாங்க பொறிமுறை - இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலை...
|
|
|


