பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பலத்த பாதுகாப்பு!

Tuesday, April 10th, 2018

வடக்கு மாகாணத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக வட மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் றொசான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தமிழ் சிங்கள புதுவருடப்பிறப்பை முன்னிட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் வியாபாரங்கள் அமோகமாக நடைபெறுவதால் பொதுமக்கள் அதிகளவில் போக்குவரத்தில் ஈடுபடுவார்கள் என்றுதெரிவிக்கப்படுகிறது.

இதனால் நெரிசல் அதிகரிப்பதனால் திருடர்களின் நடமாட்டமும் அதிகரிக்கும் எனவும், இதனாலேயே பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர்தெரிவித்துள்ளார்.

மக்கள் பொருட்களை வாங்க நெரிசலாக ஈடுபடும் நகர்ப்புறங்களில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: