பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தால், பணியிலிருந்து நீக்கப்படுவர்!

புகையிரத சேவையாளர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தால், போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளவர்கள் பணியில் இருந்து விலகியவர்களாக கருதப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புகையிரத சேவையாளர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இடம்பெற்றது. இதனையடுத்து இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் குறித்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
ரயில் சேவையை அத்தியவசிய சேவையாக மாற்றி வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள இந்நிலையில், போராட்டம் தொடர்ந்தும் இடம்பெறும் பட்சத்தில் குறித்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
Related posts:
முப்படையினருக்கு சம்பளம் அதிகரிப்பு!
சடலங்களுடன் திருமலை துறைமுகத்திற்கு வந்த GAS AEGEAN கப்பல்!
சிறுவர்கள் மத்தியில் மிக வேகமாகப் ஒரு வகையான காய்ச்சல் நோய் பரவுகின்றது - லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்...
|
|