பட்டாசு விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !

Friday, April 19th, 2019

பண்டிகைக் காலத்தில் பட்டாசுகளையும் வாணங்களையும் பயன்படுத்துவதால் நிகழக்கூடிய விபத்துக்களின் எண்ணிக்கை இம்முறை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இம்முறை கூடுதலான விபத்துக்கள் நிகழ்ந்திருப்பதாக தேசிய வைத்தியசாலையின் பிரதான தாதிப் பயிற்சி உத்தியோகத்தர் புஷ்பா ரம்யானி சொய்சா தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு பட்டாசு விபத்துக்களில் ஒருவர் காயமடைந்தார். இந்த வருடம் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

சிறுவர்கள் பட்டாசுகளைப் பயன்படுத்தும் சந்தர்ப்பத்தில் கூடுதல் கவனம் தேவை எனவும் தாதிப் பயிற்சி உத்தியோகத்தர் மேலும் தெரிவித்தார்.

Related posts: