நோய் அறிகுறிகள் தென்பட்டால் மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பவேண்டாம் – சுகாதார அமைச்சு அறிவிப்பு!
Sunday, October 24th, 2021
பாடசாலைகள மீள ஆரம்பித்துள்ள நிலையில் மாணவர்களுக்கு ஏதாவது நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் அவர்களைப் பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் என சுகாதார அமைச்சு பெற்றோர்களிடம் கோரிக்கைவிடுத்துள்ளது.
அத்துடன் நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் தரம் ஒன்று முதல் 5 வரையான ஆரம்ப பிரிவுகளை நாளை (25) முதல் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக உரியச் சுகாதார வழிகாட்டல்களும் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மாணவர்களுக்கு ஏதாவது நோய் அறிகுறிகள் காணப்படுமாயின் அவர்களைப் பாடசாலைகளுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் இது தொடர்பில் ஆசிரியர் அல்லது அதிபருக்கு அறியப்படுத்துமாறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
பாடசாலை மாணவர்களுக்கான காப்புறுதித் திட்டத்தின் கீழ் 70 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது - கல்வி அமைச்...
அமெரிக்கா – இலங்கை இடையே வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பு ஒப்பந்தம் தொடர்பான 14 ஆவது கவுன்சில் க...
யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழுவின் 46 ஆவது அமர்வுக்கு தலைமை தாங்கும் இந்தியா !
|
|
|


