நோயாளிகளுக்கு நன்மையான சட்­டங்கள்!

Friday, April 22nd, 2016
தனியார் மருத்­து­வ­ம­னை­களின் சேவைக் கட்­ட­ணங்­க­ளுக்­கான வற்­வரி அதி­க­ரிக்­கப்­படும் அதேவேளை வைத்­தியப் பரி­சோ­த­னை­க­ளுக்­கான (சனலிங்) கட்­டணம் 2000 ரூபாவாக வரையறுக்கப்­பட்­டுள்­ளதாக அமைச்­சரும் அமைச்­ச­ரவை பேச்சாள­ரு­மான ராஜித சேனா­ரத்ன தெரிவித்தார்.

அதனை மீறி அதிகட்டணம் அற­விட்டால் அத்­த­னியார் வைத்­தி­ய­சாலை கறுப்புப் பட்­டி­யலில் சேர்க்கப்­படும் என்று அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் இடம்­பெற்­ற வாராந்த அமைச்­ச­ரவை தீர்மா­னங்­களை அறி­விக்கும் ஊட­க­வி­ய­லாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோது அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சத்­திர சிகிச்சை நிபு­ணர்கள் நோயாளி ஒரு­வ­ருக்கு சத்­திர சிகிச்சை மேற்­கொண்ட பின்னர் நோயா­ளியின் அருகில் ஒரு மணித்­தி­யாலம் இருக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். இதே­போன்று நோயா­ளி­க­ளுக்கு நன்­மை­யான விதத்தில் பல சட்­டங்கள் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்­ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Related posts: