நேபாளத்துக்கு உதவும் இலங்கை!
Tuesday, September 5th, 2017
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாள மக்களுக்கு இலங்கை 50 ஆயிரம் அமெரிக்க டொலர் நிதி உதவியை நேபாளத்துக்கான இலங்கைத் தூதுவர் சுவர்னா பெரேரா, நேபாள அரசிடம் வழங்கியதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் பெய்து வரும் அடை மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 35 மாவட்டங்களிலும் பலர் உயிரிழந்துள்ளனர்.அத்துடன், 1.7 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 40 ஆயிரம் வீடுகள் அழிவடைந்துள்ளதுடன், ஒரு லட்சத்து 90 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளன.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப நேபாள அரசிடம் இலங்கை நிதி உதவியை கையளித்துள்ளது.
Related posts:
இலங்கை பேரவலத்தில் 13 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டவர்கள் பலி!
நிர்ணயிக்கப்பட்ட கடன் எல்லைக்கு அதிகமாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு கடன் வழங்க வேண்டாம் - மத்தி...
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 80,000 ஐத் தாண்டியுள்ளது - தொற்றுநோயியல் பிரிவு எச்சரிக்கை!
|
|
|


