நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை தொடர்பில் புதிய தகவல்!
Saturday, October 21st, 2017
சர்ச்சைக்குரிய நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையினை அரசுடைமையாக்கிய போதிலும் அது குறித்த எந்தவொரு சட்ட ரீதியான ஒப்பந்தங்களும் இதுவரை கைச்சாத்திடப்படவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசுடைமையாக்கிய நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை குறித்த எந்தவொரு தகவல்களும் தமக்கு கிடைக்கப் பெறவில்லை என சுகாதார அமைச்சு மற்றும் உயர் கல்வியமைச்சு ஆகியவை ஏற்றுக் கொள்வதாகவும், சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி குறித்து நாட்டில் நிலவும் சர்ச்சை நிலையினை கட்டுப்படுத்தவே இவ்வாறு தெரிவித்துள்ளதாகவும் அதற்கு குறித்த அமைச்சுக்கள் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் அரச வைத்திய அதிகாரிகளது சங்கத்தின் செயலாளர் ஹரித அழுத்கே தெரிவித்துள்ளார்.
Related posts:
ஒரே நாளில் 300 கொரோனா நோயாளிகள் பதிவு – அச்சத்தில் இலங்கை!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வெற்றியில் பங்காளர்களாக மாறுங்கள்: தொல்புரம் மக்களிடம் ஈ.பி.டி.பி. வேட...
இலங்கையின் கொரோனா தொடர்பான தற்போதைய நிலைவரம்!
|
|
|


