நுளம்பு ஒழிப்பு வேலைத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை!

கொரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த உலக நுளம்பு ஒழிப்பு வேலைத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனடிப்படையில் பொது இடங்களை இலக்காகக் கொண்டு வொல்பெகீயா பக்டீரியாவை (Wolbachia) கொண்ட நுளம்புகளை சூழலுடன் விடுவிக்கும் வேலைத்திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
டெங்கு நோயை இல்லாதொழிக்கும் நோக்குடன் கொழும்பு மாநகர சபை மற்றும் நுகேகொட சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவின் ஒரு செயற் திட்டமாக ஆரம்பிக்கப்படவள்ளதுடன் அதன்பின்னர் நாடு முழுவதும் இந்த வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சிறுவனை மீட்டு பொலிஸில் ஒப்படைத்த முல்லைத்தீவு இளைஞர்கள்!
உயிர்ப்பாதுகாப்புள்ள சிறந்த 34 நாடுகளில் இலங்கைக்கும் இடம்!
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு!
|
|