நுரைச்சோலை மின் நிலையம் நேற்று இரவு முதல் சீரானது!

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் பாதிப்படைந்திருந்த அனைத்து மின் பிறப்பாக்கி இயந்திரங்களிலும் மின் உற்பத்தி செய்யும் நடவடிக்கை வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அண்மையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் 03 மின் பிறப்பாக்கி இயந்திரங்கள் பழுதடைந்ததுடன், அதில் இரண்டு இயந்திரங்கள் விரைவாக திருத்தப்பட்டு தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கு மின்சார சபை நடவடிக்கை எடுத்திருந்தது.
எவ்வாறாயினும் அடுத்த மின் பிறப்பாக்கி இயந்திரத்தை திருத்துவதற்காக பிரதான நிறுவனத்தின் ஆலோசனை பெறப்பட்டிருந்ததுடன், தற்போது அதுவும் மின் உற்பத்தி செய்யும் நிலையில் காணப்படுவதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்ற முழுமையான மின்சாரத்தையும் இன்று இரவு முதல் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பதற்கு எதிர்பார்ப்பதாக மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன கூறினார்.
Related posts:
|
|