நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள 5 நாட்கள் ஆகலாம் – அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
Tuesday, September 27th, 2022
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள 3 முதல் 5 நாட்கள் வரை ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
பழுதுபார்க்கும் பணிகள் முடியும் வரை மின் உற்பத்தியை நிர்வகிக்க எரிபொருள் மின் நிலையங்கள் பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரம் பழுதடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பாடசாலை சுற்றாடலில் விவசாய உற்பத்தி - கல்வியமைச்சின் செயலாளர்!
எவருக்கும் ஆதரவு தரப்போவதில்லை - மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!
கடந்த 7 மாத காலப்பகுதியில் நாட்டில் இருந்து வெளியேறிய 600 பேராசிரியர்கள் - பல்கலைக்கழக பேராசியர்கள் ...
|
|
|


