நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் இரண்டாம் மின்பிறப்பாக்கி மீண்டும் தேசிய மின்கட்டமைப்புடன் இணைவு – இலங்கை மின்சார சபை தெரிவிப்பு!
Wednesday, August 16th, 2023
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் இரண்டாம் மின்பிறப்பாக்கி மீண்டும் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
முன்பதாக குறித்த மின்பிறப்பாக்கி கடந்த 8 ஆம் திகதி பழுதடைந்திருந்தது. இந்தநிலையில் அதன் திருத்தப்பணிகள் நிறைவு செய்யப்பட்டு மீளவும் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய தேசிய மின்கட்டமைப்புடன் 270 மொகாவோட் மின்சாரம் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது
Related posts:
காலாவதியான மருந்துகள் விற்பனை: மருந்தகத்திற்கு சீல் வைக்க உத்தரவு!
கோர விபத்து: பெண்கள் உட்பட 5 பேர் பலி !
புதிய அமைச்சரவை தொடர்பில் இன்று முக்கிய பேச்சுவார்த்தை – சில தினங்களுக்குள் ஜனாதிபதி தலைமையில் ஆளுந்...
|
|
|


