நுரைச்சோலை அனல்மின் நிலையம் நவம்பர் 01ஆம் திகதி முதல் முழுமையாக இயங்கும்!
Saturday, October 29th, 2016
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் அனைத்து மின் பிறப்பாக்கி இயந்திரங்களிலும் மின் உற்பத்தி செய்யும் நடவடிக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 01ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்படும் என மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்சமயம் இரண்டு மின் பிறப்பாக்கி இயந்திரங்களின் மூலம் மின் உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய மின் பிறப்பாக்கி இயந்திரங்களின் மூலமான மின் உற்பத்தி எதிர்வரும் நவம்பர் மாதம் 01ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதேவேளை வாடிக்கையாளர்களுக்கு மின்சார சபை நட்டஈடு வழங்கும் முறை ஒன்றை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அறிமுகப்படுத்துவதாகவும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:
பெற்றோல் சர்ச்சை: CID விசாரணை!
மழையுடனான வானிலை மேலும் தொடரும் - வடக்கு கிழக்கு மக்களுக்கு வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை!
யாரையும் வலுக்கட்டாயப்படுத்தி தடுத்து வைத்திருக்க எமக்கு எந்த ஒரு தேவையும் கிடையாது – பிரதமர் சுட்டி...
|
|
|
பனை அபிவிருத்தி வாரத்தை முன்னிட்டு நல்லூர் சங்கிலியன் பூங்காவில் பனம் உற்பத்திப் பொருள் கண்காட்சி !
அரைவாசி கட்டணத்தையே அறவிட தீர்மானம் - அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவைகள் சங்கத்தின் தலைவர் தெர...
அதிகபட்ச விலைக் காட்சிப்படுத்தவது கட்டாயம் - இல்லையேல் சட்ட நடவடிக்கை என அமைச்சர் நளின் பெர்னாண்டோ அ...


