நுணாவில் பகுதியில் விபத்து – லான்ட் மாஸ்ரரில் பயணித்த நபர் உயிரிழப்பு!
Thursday, May 2nd, 2024
சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைதடி – நுணாவில் பகுதியில் ஏ9 வீதியில் 01/05 புதன்கிழமை காலை 5மணியளவில் இடம்பெற்ற விபத்தில் லான்ட் மாஸ்ரரில் பயணித்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரியில் இருந்து நாவற்குழி நோக்கி சென்று கொண்டிருந்த லான்ட் மாஸ்ரரின் (இரு சக்கர உழவியந்திரம்) பின்புறமாக கொழும்பில் இருந்து யாழ் நோக்கிச் சென்ற ஹயஸ் வாகனம் மோதியதில் மேற்படி விபத்துச் சம்பவித்துள்ளது.
இதில் லான்ட் மாஸ்ரரில் பயணித்த கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த ம.சதீஸ்குமார் என்பவரே படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
மேலும் விபத்தில் லான்ட் மாஸ்ரர் சாரதி உட்பட லான்ட் மாஸ்ரரில் பயணித்த மூவர் மற்றும் ஹயஸ் வாகனத்தில் பயணித்த பெண் ஒருவருமாக மொத்தம் நால்வர் படுகாயமடைந்த நிலையில் சிகிட்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


