நீதிமன்றம் அதிரடி உத்தரவு : தடை செய்யப்பட்ட வலைகள் தீயிட்டு எரிப்பு!
Saturday, August 4th, 2018
வவுனியா மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட தங்கூசி வலைகள் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.
கடந்த சில வாரங்களாக தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவை நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.
மாமடு, வவுனியாகுளம் , பாவற்குளம் , மடுக்கந்தை போன்ற பிரதேசங்களிலிருந்து கைப்பற்றப்பட்ட சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான வலைகளே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் கடந்த சில வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது 15 நபர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
Related posts:
நாடாளுமன்ற தோர்தல் தொடர்பில் இதுவரை நான்காயிரத்து 363 முறைப்பாடுகள் - தேர்தல் ஆணைக்குழு தகவல்!
நிரந்தரமாக விடைகொடுக்கிறது பிரித்தானியா - 2 ஆம் எலிசபெத் மகாராணியின் உடல் இன்று நல்லடக்கம் – இலங்கைய...
ஏப்ரல் 21 தாக்குதலுக்கு மன்னிப்பு கோருகின்றார் மைத்ரி - அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக அ...
|
|
|


