நீதிமன்றங்களின் பாதுகாப்பு அதிகரிப்பு!

Friday, March 3rd, 2017

நாட்டிலுள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் மேலதிக பொலிஸ் பாதுகாப்பை வழங்குவதற்கு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் ஆலோசனையின் பிரகாரம் பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கொழும்பு – கல்கிஸை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் இருந்து நேற்றைய தினம் துப்பாக்கி ஒன்றும், தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டதால் நீதிமன்ற வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையினால் சுமார் மூன்று மணிநேரம் நீதிமன்ற செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டிருந்தன.

குருநாகல் பொலிஸ் நிலையத்தில் சேவையிலிருந்த அதிகாரி ஒருவரை சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டில் இவர் கைதாகி கொழும்பு மகஸின் சிறையில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் பிரபல பாதாள உலகக் குழுவின் தலைவரான ரோஹா என்பவர் நேற்று பிற்பகல் கல்கிஸை நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டிருந்தார்.

இந் நிலையில் அவர் றே்றைய தினம் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டபோது அவரை படுகொலை செய்வதற்கு இந்த ஆயுதங்களைப் பயன்படுத்த பாதாள உலகக் கும்பல் திட்டமிட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இதன் காரணமாக நீதிமன்றங்களின் பாதுகாப்பு தொடர்பில் நாட்டிலுள்ள அனைத்து நீதிமன்றங்களினதும் மேலதிக பாதுகாப்பிற்காக பொலிஸார் களமிறக்கப்பட்டுள்ளனர்.

613625051Pujitha

Related posts: