நில அதிர்வுகளை கண்காணிக்கும் 5 ஆவது மையத்தை மேல்மாகாணத்தில் ஸ்தாபிக்க நடவடிக்கை – சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவிப்பு!
Thursday, September 16th, 2021
இலங்கையில் நில அதிர்வுகளை கண்காணிக்கும் 5 ஆவது மையத்தை மேல் மாகாணத்தில் ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அண்மையில் நாட்டை அண்மித்த சில பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டன. லுணகம்வேஹர பகுதியில் நில அதிர்வுகள் உணரப்பட்டதால் நாட்டில் மேலும் நில அதிர்வுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும், அவ்வாறான எந்த தகவல்களையும் நிபுணர் குழு தமக்கு அறிவிக்கவில்லை. இதனால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பணிப்பாளர்களின் தெரிவு காலம் தாழ்த்தியே நடைபெறுகிறது - கல்வியியலாளர்கள் விசனம்!
தேர்தலை முன்னிட்டு நடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் இரு தினங்கள் பூட்டு!
மின் கட்டணத்தை செலுத்த மத ஸ்தலங்களுக்கு நீண்ட கால அடிப்படையில் நிவாரண திட்டம் - அமைச்சர் பந்துல குண...
|
|
|


