நிமல் சிறிபால டி சில்வா விவகாரம் – வழக்கு விசாரணை நிறைவடையும் வரை இரத்து செய்து நீதிமன்றம் உத்தரவு!
Saturday, March 11th, 2023
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பதவியிலிருந்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை நீக்கும் செயற்பாட்டை, அது குறித்த வழக்கு விசாரணை நிறைவடையும் வரை இரத்து செய்து கொழும்பு பிரதான நீதிவான் பூர்னிமா பரணகம தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேல்மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அமைய இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், மைத்ரிபால சிறிசேன மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் ஆகியோருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விசாரணை நிறைவடையும் வரை தம்மை குறித்த பதவியிலிருந்து நீக்குவதற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் திகதி மனுத்தாக்கல் செய்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
கொழும்பில் இன்றுமுதல் பஸ் போக்குவரத்துக்கான முன்னுரிமை திட்டம்
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மேலதிக கொடுப்பனவு அதிகரிப்பு!
ஜனாதிபதியின் அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையினால் இலங்கையின் வெளிநாட்டு உறவுகளை சரியான பாதையில் கொண்டு ...
|
|
|


