நினைத்தவுடன் எவரையும் கைது செய்யும் அதிகாரத்தை எவரிடமும் நான் ஒப்படைக்கவில்லை – ஜனாதிபதி தெரிவிப்பு!

கடந்த காலங்களில் நடந்ததைப் போல – நினைத்த மாத்திரத்தில் எவரையும் கைது செய்யும், அல்லது தன்னிச்சையாக எவரையும் விடுவித்துவிடும் அதிகாரம் எதனையும் எந்த ஒர் அரசியல் வாதியிடமும் ஒப்படைத்துவிட நான் தயாராக இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரச அதிகாரிகள் அல்லது திணைக்களங்கள் விடும் குறைபாடுகள் அல்லது செய்யும் தவறுகளைச் சரிசெய்து சீர்படுத்த நான் நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொர்பில் ஜனாதிபதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடன் எங்கள் அரசாங்கம் எந்தவித அரசியல் உடன்பாட்டுக்கும் வந்துவிடவில்லை என்பதை நான் உறுதிபட எமது மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
என் மீது நம் நாட்டு மக்கள் இதுவரை வைத்திருக்கும் நம்பிக்கையை நான் வீணாக்க மாட்டேன் என்றும், மாறாக அந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தவே நான் தொடர்ந்தும் பணியாற்றுவேன் என்றும் மக்களுக்கு உறுதியளிக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்..
Related posts:
|
|