நாளை நள்ளிரவு முதல் போக்குவரத்து கட்டணங்கள் குறைப்பு!
Tuesday, December 25th, 2018
கடந்த தினங்களில் ஏற்பட்ட எரிபொருள் விலை மாற்றத்திற்கமைய நாளை நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்கள் குறைக்கப்பட உள்ளதாக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் பேருந்து கட்டணங்கள் நூற்றுக்கு 4 வீதத்தினால் குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் குறைந்த பட்ச கட்டணங்களில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, முச்சக்கர வண்டிக் கட்டணமும் குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆரம்ப கட்டணம் 10 ரூபாவினால் குறைக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனவே 60 ரூபாவாக இருந்த ஆரம்ப கட்டணம் 50 ரூபா வரையில் குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணம் நூற்றுக்கு 3 வீதத்தினால் குறைக்கப்பட உள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த அனைத்து கட்டணங்களும் நாளை நள்ளிரவு முதல் குறைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|
|


