நாளை திறைசேரி உத்தரவாதம் வழங்கினால் இரண்டு நாட்களில் வர்த்தமானி வெளியிடப்படும் என தகவல்!
Monday, March 6th, 2023
தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு திறைசேரியினால் தேவையான உத்தரவாதம் நாளை செவ்வாய்க்கிழமை வழங்கப்படுமாயின், தேர்தலை நடத்துவதற்கான திகதி புதன் அல்லது வியாழன் அன்று வர்த்தமானியில் வெளியிடப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன.
தேர்தல்கள் ஆணைக்குழு நாளை காலை தேர்தல் நாள் குறித்து முடிவு செய்வதற்காக திறைசேரி செயலாளர், அரசாங்க அச்சக அதிகாரி மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரை சந்திக்க உள்ளது.
திறைசேரியினால் தேவையான உத்தரவாதம் வழங்கப்பட்டால் வர்த்தமானி வெளியிடப்பட்டு பின்னர் தேர்தல் வர்த்தமானி அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் வெளியிடப்படும்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மார்ச் 9 ஆம் திகதி நடைபெறும் என முதலில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்த போதிலும், நிதி உள்ளிட்ட பிரச்சினைகளினால் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறாது என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பல்கலை கல்வியை கைவிட்டவர்கள் மீண்டும் தொடர்வதற்கு விண்ணப்பம் கோரல்!
ஜனவரி 10 முதல் பெரும்போக நெல் அறுவடை - கொள்வனவு செய்ய தாயாராக உள்ளதாக அரச நெல் சந்தைப்படுத்தல் சபை அ...
பாகிஸ்தானில் கொடூர கொலை - காப்பாற்ற போராடிய பிரஜைக்கு அதியுயர் விருது!
|
|
|
பல்வேறு நோய்கள் இருப்பதாகக்கூறி தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள மறுப்பது பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தும்...
நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு ஜூலை 1 முதல் வழங்கப்படும் - தகவல்களை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டங்கள் ...
வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை நாடு திரும்பியுனார் ஜனாதிபதி ரணில் விக்கிர...


