நாளையும் 200 நிமிடங்கள் மின்வெட்டு – பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவிப்பு!

Tuesday, April 19th, 2022

நாட்டில் இன்றும் நாளையும் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடமும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

இதற்காக மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.

இதன்படி, A முதல் W வரையான வலயங்களில் இன்றும் நாளையும் முற்பகல் 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியில் 2 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.

அத்துடன் மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஒரு மணிநேரமும் 20 நிமிடமும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


உண்மைக்குப் புறம்பான விடயங்கள்: யோசனையை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டாம் என அமெரிக்காவிடம் இலங்கை கோ...
இறையாண்மையுடன் கூடிய அனைத்து அரசாங்கங்களினதும் வலிமைகளை பொருட்படுத்தாது, நியாயமான முறையில் வசதிகளை ஏ...
போதுமான அத்தியாவசிய பொருட்கள் கையிருப்பில் உள்ளன - அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்குவதற்க...