நாட்டுக்கு வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!
Monday, February 12th, 2024
நாட்டுக்கு வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, இந்த மாதத்தின் கடந்த 8 நாட்களில் மாத்திரம் 60 ,122 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர்.
அத்துடன், கடந்த மாதத்தில் 2 இலட்சத்து 82 ஆயிரத்து 53 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.
குறிப்பாக ரஸ்யாவில் இருந்தே அதிகளவிலான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர்.
இதன்படி, ரஸ்யாவில் இருந்து 8,755 சுற்றுலாப்பயணிகளும், இந்தியாவில் இருந்து 8,369 சுற்றுலாப்பயணிகளும், ஜேர்மனியில் இருந்து 4,423 சுற்றுலாப்பயணிகளும் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு 15,000 ரூபா கொடுப்பனவு!
மின்னணு மூலம் தனிநபர் வரி - கட்டாயமாக்கப்படும் புதிய முறை!
இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ் மாவட்ட கடற்பகுதிகளில் கறுப்புக் கொடி போராட்டம் - யாழ்...
|
|
|


