நாட்டில் 11 ஆயிரத்து 335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 23 பேர் மரணம் – சுகாதார அமைச்சு அறிவிப்பு!
 Tuesday, November 3rd, 2020
        
                    Tuesday, November 3rd, 2020
            
நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 335 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்றைய தினம் 275 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தனிமைப்படுத்தல் நிலையங்களில் 43 பேரும் நோயாளர்களுடன் தொடர்புளை பேணிய 121 பேரும் பேலியகொடை கொத்தணிகளுடன் தொடர்புடைய 111 பேரும் இதில் அடங்குகின்றனர்.
தொற்றுடன் அடையாளம் காணப்பட்டோரில் இதுவரை 6 ஆயிரத்து 65 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிக்சை பெற்று வருகின்றனர். இதனிடையே நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இம்முறை யாழ்.மாவட்டத்தில் 2000 ஹெக்ரெயரில் வெங்காயச் செய்கை!
வெளிநாடுகளிலிருந்து தொழிலாளர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம் - வெளிவ...
விவசாயத் துறை நவீனமயமாக்கலுக்கு மேலும் 2500 மில்லியன் - ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக விவசாய அமைச...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        