நாட்டில் மாதாந்த எரிபொருள் விற்பனை அதிகரித்து வருகின்றது – மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
Sunday, April 14th, 2024நாட்டில் மாதாந்த எரிபொருள் விற்பனை அதிகரித்து வருவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை எக்ஸ் செய்தியொன்றின் ஊடாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் எரிபொருள் பாவனை 50% குறைந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.
இலங்கையில் சிபெட்கோ, லங்கா ஐஓசி மற்றும் சினோபெக் ஆகிய நிறுவனங்கள் கடந்த பருவத்தில் விற்பனை செய்த எரிபொருள் அளவு தொடர்பான தரவுகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், கடந்த மார்ச் மாதத்தில் எரிபொருள் விற்பனையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்ள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
குடாநாட்டை மிரட்டும் கொள்ளையர் குழுவை அடக்கஅவசர கூட்டத்திற்கு ஏற்பாடு!
சாரதிகளின் கண் பார்வையைப் பரிசோதிக்கத் திட்டம்!
தனியார் பஸ் பணிப் பகிஸ்கரிப்பு போராட்டம் ஆரம்பம்!
|
|
|


