நாட்டில் டெங்கு உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை!

Monday, April 22nd, 2024

நாட்டில் இந்த ஆண்டில் மேலும் ஒரு டெங்கு உயிரிழப்பு பதிவாகியுள்ளது. அதன்படி, டெங்கு உயிரிழப்புகளின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் இதுவரை 21 ஆயிரத்து 453 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

குறிப்பாக கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 4 ஆயிரத்து 608 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவு டெங்கு நுளம்பு பரவும் ஆபத்தான வலயங்களாக அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது

000

Related posts: