நாட்டில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கர்ணகொட தலைமையிலான குழுவின் அறிக்கையின் பிரகாரம் விசாரணைகள் முன்னெடுப்பு!

கடந்த மார்ச் மாதம்முதல் மே மாதம் 9 ஆம் திகதி வரை நாட்டில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கர்ணகொட தலைமையிலான குழுவின் அறிக்கையின் பிரகாரம் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திற்கு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
கடந்த வருடம் நாட்டில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரணாகொட தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
அதன்படி விசாரணை அறிக்கையை அண்மையில் அந்த குழு சட்டமா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளது.
இது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும் என அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி கடந்த வருடம் நாட்டில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|