நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் அபாயம் – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் எச்சரிக்கை!
Wednesday, May 18th, 2022
நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதென நாட்டிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அண்மைய நாட்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த மாதத்தில் இதுவரை 2 ஆயிரத்து 797 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆசனங்களை ஒதுக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம் - நாடாளுமன்ற பிரதி பொதுச் செயல...
வேகமாக பரவுகிறது டெல்டா மாறுபாடு: அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அவசர அறிவிப்பு!
விமர்சனங்களை முன்வைக்காமல் வெளியேறுங்கள் - சுதந்திரக்கட்சிக்கு அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன அறிவுரை!
|
|
|


