நாட்டின் பசுமை சக்தி உற்பத்தித் தேவைக்கு வடக்கு மாகாணம் பங்களிக்கும் – யாழ் மாவட்ட கல்விமான்கள் சந்திப்பில் ஜனாதிபதி நம்பிக்கை!

Saturday, February 11th, 2023

வடபகுதி கடற்கரை பகுதியில் காற்றாலை மின்னுற்பத்தி மற்றும் உயிர்வாயு உற்பத்தி பற்றியும் ஆராய்ந்து வருகிறோம். வலு மின் உற்பத்தித் திட்டங்களும் இருக்கின்றன இதன் மூலம் நாட்டிலுள்ள பசுமை சக்தி உற்பத்தித் தேவைக்கு வடக்கு மாகாணம் பங்களிக்கும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் யாழ்ப்பாணம் வருகைதந்திருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏறங்பாட்டில் கல்வியாளர்கள் முதலீட்டாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினருடன் ரில்கோ தனியார் விடுதியில் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.  

குறித்த சந்திப்பின்போது வடபகுதியின் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் முதலீட்டு வாய்ப்பகள் தோடர்பில் ஆராயப்பட்டது.

இதன்போது விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் உரத் தட்டுப்பாடு தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்த போது, “விவசாயத்தைப் பொறுத்தமட்டில் ஒரு விடயத்தைக் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும்.

இம்முறை உரத்துக்கான மானியத்தில் நெற்செய்கைக்காக மட்டுமே வழங்கியிருக்கிறோம். அரசாங்கத்துக்கு அது ஒரு உதவித்திட்டத்தின் கீழ் கிடைத்தது.

அதனால் ஏனைய பயிர்களுக்கான உர மானியம் பற்றி – அதனை எங்கிருந்து பெற்றுக் கொள்ளலாம் என்பது பற்றி ஆராய்ந்து வருகிறோம்” என்று குறிப்பிட்டார்.

மேலும் புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு வருகின்ற போது, அதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்வதில் மிக நீண்ட கால தாமதம் ஏற்படுகிறது. இந்தத் தாமதம் நீக்கப்பட வேண்டும்.

முதலீட்டாளர்களைப் பொறுத்த வரை குறுகிய காலத்துக்குள் நடைமுறைப்படுத்துவதையே விரும்புகிறோம் என்று முதலீட்டாளர் ஒருவர் குறிப்பிட்டதற்குப் பதிலளித்த ஜனாதிபதி, இலங்கையில் முதலீடு செய்யவிரும்பும் வெளிநாட்டில் வதியும் இலங்கையர்களுக்கென நாங்கள் புலம்பெயர்ந்தோருக்கான முதலீட்டு அலுவலகங்களைத் திறந்துள்ளோம். 

அவ் அலுவலகங்கள் முதலீட்டாளர்களுக்கான சகல தேவைப்பாடுகளையும் மூன்று மாத காலத்துக்குள் பூர்த்தி செய்து தரும். அரச அலுவலகங்களில் இருக்கும் நடைமுறைத் தாமதங்கள் பற்றி நீங்கள் அறிவீர்கள். இவற்றை விரைவுபடுத்த அரசாங்கம் முயற்சி செய்யும் என்றார்.

அத்துடன் அமைய அடிப்படையில் பணியாற்றும் சிற்றூழியர்களுக்கான நிரந்தர நியமனம்,  திக்கம் வடிசாலைப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், வீதி புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு தரப்பினரும் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: