நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைக்காக 84 ஆயிரம் பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினர் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் !
Thursday, July 30th, 2020
நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைக்காக சுமார் 84 ஆயிரம் பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரை பணியில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொதுத் தேர்தலுக்காக 75 ஆயிரம் பொலிஸாரையும் 9 ஆயிரம் சிவில் பாதுகாப்பு படையினரையும் சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகள் தேர்தல் காலத்தில் பின்பற்றப்படுகிறதா? என்பது பற்றி பாதுகாப்புப் பிரிவினர் மிகுந்த கவனம் செலுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தமிழில் தேசிய கீதம் பாடியமைக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வருகிறது!
சுகாதார பணியாளர்கள் நாடுதழுவிய ரீதியல் பணிபகிஷ்கரிப்பு!
லக்ஷபான மின் உற்பத்தி நிலையம் பழுது - டீசல் இல்லை – மின்சார சபையிடம் பணமும் இல்லை - மின்வெட்டு நேரத்...
|
|
|


