நாடாளுமன்றுக்கு ஜனாதிபதி இரகசியமாக வரவில்லை – பதவியும் விலக மாட்டார் – இராஜாங்க அமைச்சரான காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
Friday, April 8th, 2022
நாடாளுமன்றுக்கு ஜனாதிபதி இரகசியமாக வந்துவிட்டுச் செல்லவில்லை என்றும் மாறாக எதிர்க்கட்சிகளே ஜனாதிபதி வருவதை முன்னிட்டு ஒழிந்தார்கள் என்றும் இராஜாங்க அமைச்சரான காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று வெள்ளிக்கிழமை கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அத்தோடு, அரசமைப்புக்கு இணங்க ஜனாதிபதி விலக மாட்டார் என்றும் அவர் எதற்காக பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கேள்வியெழுப்பினார்.
மேலும், ஜனாதிபதியும் பிரதமரும் எதிர்க்கட்சிகளுக்கு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளார்கள் என்றும் அதற்கிணங்க விருப்பமான அமைச்சரவையொன்றை ஸ்தாபித்துக்கொள்ளுங்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
000
Related posts:
வழங்கப்படும் நிவாரணங்கள் போதுமானதாக இல்லையென மக்கள் சுட்டிக்காட்டு!
வேலைத்திட்டங்களை இடைநடுவே நிறுத்தாது பூர்த்தி செய்வதற்கு அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைந்து செயற்பட வ...
புறக்கோட்டை அத்தியாவசிய மொத்த வர்த்தக நிலையங்களை திறக்குமாறு வர்த்தகத்துறை அமைச்சர் கோரிக்கை!
|
|
|


