நாடளாவிய ரீதியில் 1500 கிராம உத்தியோகத்தர்கள் வெற்றிடம் – பொது நிர்வாக அமைச்சு அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்களுக்கான 1500 வெற்றிடங்கள் காணப்படுவதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த வெற்றிடங்களுக்கு எதிர்வரும் நாட்களில் பரீட்சைகளை நடத்தி, தகுதி வாய்ந்தோரை தெரிவு செய்யவுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்தார்.
அவ்வாறு இல்லாவிட்டால், ஏற்கெனவே, நடைபெற்ற பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அதிக புள்ளிகளை பெற்றுக் கொண்ட விண்ணப்பதாரிகளை இணைத்துக் கொள்வதற்கு இயலும் எனவும் அவர் கூறியுள்ளார்.
பொதுத் தேர்தலின் பின்னர் இது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
தேசிய பாதுகாப்பு தொடர்பில் எந்த பிரச்சினைகளும் இல்லை - அமைச்சர் தலதா அத்துகோரள!
மீண்டும் பயங்கர தாக்குல்கள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கும் கலகொடஅத்தே ஞானசார தேரர்!
டெங்கு தொற்று தொடர்பில் மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் விடுத்துள்ள முக்கிய பணிப்புரை!
|
|