நவம்பர் மாதம் 13 இல் 2024 ஆம் நிதி ஆண்டுக்கான பாதீடு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிடிய தெரிவிப்பு!
Tuesday, September 26th, 2023
2024 ஆம் நிதி ஆண்டுக்கான பாதீடு எதிர்வரும் நவம்பர் மாதம் 13 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு உரை நிகழ்த்தப்படவுள்ளது.
அத்துடன் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிடிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை 2 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அத்துடன், 2024 பாதீட்டு தொடர்பான மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 22 முதல் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
தனியார் பேருந்து மற்றும் புகையிரத சேவைகள் நாளை முதல் பணிப்பகிஷ்கரிப்பு!
இன்புளுவன்ஸா வைரசுக்கான மருந்துகளுக்கு பெரும் தட்டுப்பாடு - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!
ஊடகங்களின் மூலம் கல்வி நடவடிக்கைகளுக்கு அதிக வாய்ப்பை வழங்ங்கள் - அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கோரி...
|
|
|


