நல்லூர் மக்களின் அரசியலின் குரலாக ஒலித்தவர் மறைந்து 20 ஆண்டுகள்!
Friday, May 31st, 2019
மக்களுக்காக தனது உயிரை தியாகம் செய்த தோழர் ரகு (தியாகராஜா ராஜகுமார்) அவர்களின் 20 ஆவது நினைவு தினம் இன்றாகும்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச முன்னாள் அமைப்பாளரும் முன்னாள் நல்லூர் பிரதேச சபையின் உபதவிசாளருமாக இருந்து மக்களுக்காக உழைத்த தோழர் ரகு அவர்கள் 1999 ஆம் அண்டு மே மாதம் 31 ஆம் திகதி புலிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் படுகொலையானார்.
தமிழ் மக்களுக்கு உன்னதமான வாழ்வை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்பதற்காக நல்லூர் பிரதேசத்தின் உபதவிசாளராக பொறுப்பெடுத்து மக்களுக்காக தம்மை அர்ப்பணித்து செயற்பட்டுவந்த வேளையில் தனது இன்னுயிரை ஈகம் செய்த தோழர் ரகு அவர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அஞ்சலி மரியாதைகள்.
தமிழ் மக்களுக்காக தன்னை அர்ப்பணித்த தோழர் ரகு அவர்கள் குடாநாட்டு மக்கள் எதிர்கொண்ட நெருக்கடியான காலகட்டத்தில் குடாநாட்டு மக்களுக்கு தோள் கொடுப்பதற்காக செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது எண்ணக்கருக்களை ஈடேற்றும் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த வேளையில் தனது தாயாரின் வீட்டிற்கு சென்று திரும்பும் வழியில் பழம் வீதி, கந்தர்மடம் பகுதியில் வைத்து அவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த படுகொலையின் போது அவரது மனைவியின் தம்பியாரும் படுகொலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்களின் உன்னதமான வாழ்வுக்காக தம்மை அர்ப்பணித்து தனது இன்னுயிரை ஈகம் செய்த தோழர் ரகு அவர்களுக்கு எமது காலத்தால் அழியாத அஞ்சலி மரியாதைகள்.

Related posts:
|
|
|


