நல்லூர் செம்மணி வளைவிற்கு அண்மையாக ஏ9 வீதியில் விபத்து – கணவன் உயிரிழப்பு – மனைவி படுகாயம்!
 Saturday, August 19th, 2023
        
                    Saturday, August 19th, 2023
            
யாழ்ப்பாணம், ஏ9 வீதியில் இன்று மதியம் மோட்டார் சைக்கிளும், பொலிசாரின் தண்ணீர் பவுசரும் மோதி விபத்துக்குள்ளானதில் கணவன் உயிரிழந்ததுடன் மனைவி படுகாயமடைந்துள்ளார்.
நல்லூர் செம்மணி வளைவிற்கு அண்மையாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்தபோது, பொலிசாரின் தண்ணீர் பவுசருடன் மோதி விபத்துக்குள்ளாகினர்.
இதில் கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவத்தில் 31 வயதுடைய புவனேஸ்வரன் மனோஜ் என்ற கொக்குவில் கிழக்கை சேர்ந்த இளைஞரே உயிரிழந்தார்.
மன்னாரை சேர்ந்த 26 வயதான மனைவி உயிராபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உடன் அமுலுக்குவரும் வகையில் கப்பலில் பணியாற்றுவதற்காக வெளிநாட்டவர்கள் இலங்கை வர தடை  -  ஜனாதிபதி அறி...
புதிய பிரதமராக தினேஸ் குணவர்தன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம்!
ஜனாதிபதி ரணிலின் தலைமையின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் சிறப்பாக உள்ளன - ஜப்பானிய வெளியுறவுத்த...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        