நற்பிரஜையை உருவாக்கும் நோக்கத்தில் தனியார் கல்வி நிலையங்களின் வகிபாகம் குறைவாக உள்ளது – விரிவுரையாளர் சுட்டிக்காட்டு!

நற்பிரஜையை உருவாக்கும் நோக்குடன் பாடசாலையே பிரதானமாகக் காணப்படுகின்றது. அதனுடன் ஒப்பிடுகையில் தனியார் கல்வி நிலையங்களின் வகிபாகம் குறைவு என கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் கு.பாலசண்முகன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று காலை இடம்பெற்று வரும் கலந்துரையாடலில் இவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சமயம் சார்ந்து வகுப்பறையில் படங்களை வைத்து வணங்கும் மாணவர்களை தடுக்கும் அதிபர்களும் கையில் நூல்கள் கட்டிய மாணவர்களை தடுக்கும் அதிபர்களும் இங்கு காணப்படுகின்றார்கள்.
ஆசிரியர்கள் தவறு செய்யும் போது வழங்கப்படும் காத்திரம் அதிகமாக இருக்கின்றது. குறிப்பாக ஆசிரியர்களை இச் சமூகம் காணும் கண்ணோட்டம் காத்திரமானதும் வெறுப்புணர்வு மிக்கது என்றுமு; தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
முறைகேடுகளை விசாரிக்க விசேட சட்டத்தரணிகள் குழு நியமனம்!
மதரசாக்களை கல்வித்துறை கண்காணிப்பில் கொண்டு வர அரசு முடிவு!
எதிரணி மற்றும் மக்களது கேள்விகளுக்கு பதிலளிக்க நாடாளுமன்றில் அமைச்சர்களது பிரசன்னம் கட்டாயம் - ஜனாதி...
|
|