நயினாதீவு நாகபூசனி அம்மன் கோயில் வருடாந்த மகோற்சவம் இவ்வருடம் இடம்பெறாது!

Thursday, September 2nd, 2021

யாழ்ப்பாணம் – நயினாதீவு நாகபூசனி அம்மன் கோயில் வருடாந்த மகோற்சவம், இவ்வருடம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கோயிலின் வருடாந்த மகோற்சவம், கடந்த ஜூன் 10ஆம் திகதியன்று இடம்பெறவிருந்தது.

இந்நிலையில் நாட்டிலேற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணமாக, செப்டெம்பர் 06 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஆனாலும் தற்போதும் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துச் செல்வதால், முன்னர் அறிவிக்கப்பட்டதைப் போன்று இம்மாதம் 06 ஆம் திகதியன்று மகோற்சவத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கோயில் அறங்காவலர் சபையினர் அறிவித்துள்ளனர்.

எனவே, இந்த வருட மகோற்சவம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: