“நட்பின் சிறகுகள்” தொனிப்பொருளுடன் வான்படையினரின் “வான் சாகசம் – 2024” கண்காட்சி நிகழ்வுகள் யாழ். முற்றவெளி மைதானத்தில் ஆரம்பம்!

இலங்கை விமானப்படையின் 73 ஆவது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் – 2024” கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணம் – முற்றவெளி மைதானத்தில் இன்று ஆரம்பமாகியுள்ளது
“நட்பின் சிறகுகள்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இன்று (10) ஆரம்பமாகிய குறித்த கண்காட்சி எதிர்வரும் 10 ஆம் திகதி வரை காலை 10 மணிமுதல் இரவு 11 மணிவரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய ஆரம்ப நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைத்துள்ளார்.
கண்காட்சியில் விமான படை வீரர்களின் சாகசங்கள் இடம்பெற்று வருவதுடன், ஆளில்லா விமானங்கள், விமானப்படையின் தளபாடங்கள், உலங்கு வாநூர்திகள் என்பன காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பாடசாலை மாணவர்கள் இந்த கண்காட்சியை முற்றிலும் இலவசமாக பார்வையிட முடியும் என்பதுடன் ஏனையோர் 100 ரூபாய் கட்டணம் செலுத்தி இந்த கண்காட்சியை பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|