நட்சத்திர ஹோட்டல்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்!
 Monday, July 8th, 2019
        
                    Monday, July 8th, 2019
            
ஏப்ரல் தாக்குதலின் பின்னர் சுற்றுலா பயணிகளின் குறைவடைந்துள்ளமையினால் 10 அதிக சொகுசு ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளதாக இலங்கை ஹோட்டல் சங்கம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலின் பின்னர் பல ஹோட்டல்கள் சிரமங்களுக்குள்ளாகியுள்ளதாகவும், அதன் முடிவாக சில ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன.
ஊழியர்களுக்கு தொடர்ந்தும் சம்பளம் வழங்குவதில் பல்வேறு சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் சனத் உக்வத்த தெரிவித்துள்ளார்.
கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளின் சுற்றுலா பயணிகளின் வருகை காணப்பட்ட போதிலும், அவர்களில் அதிமானோர் அந்த நாடுகளில் வாழும் இலங்கையர்கள் என தெரியவந்துள்ளது.
ஹோட்டல்களை இவ்வாறு குறைந்த கட்டணத்தின் கீழ் நடத்தி செல்ல முடியாதெனவும், சில ஹோட்டல்கள் தங்களை தொடர்ந்தும் தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கின்றனர்.
எனினும் அந்த ஹோட்டல்களில் சேவை செய்யும் ஊழியர்களுக்கு உட்பட இலவசமாக உணவுகள் வழங்குவதற்கேனும் முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        